உலக சந்தையில் எரிபொருள் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகர நிலைமைக்கு மத்தியில், இலங்கைக்குள் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.
எரிபொருள் பாரியளவில் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளிலும் அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பது இதற்கான பதில் கிடையாது என கூறிய அவர், மீண்டும் எரிபொருளுக்கான QR நடைமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்;.
உலகின் பல நாடுகளுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள யுத்த நிலவரம், குளிருடனான வானிலை, எரிபொருள் விநியோகத்திற்கான காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைகின்றமை ஆகிய காரணிகள், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக அமையவுள்ளதாக அவர் கூறுகின்றார்.