சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கை வருகின்றமை குறித்து அமெரிக்கா கவலை தெரிவிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துப் பேசியபோது கூறியுள்ளார்.
எனினும், இலங்கை ஒரு நடுநிலை நாடு என்ற வகையில், வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கைப் பிரதேசத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SPO) வகுத்துள்ளதாக அமைச்சர் சப்ரி அவருக்கு விளக்கமளித்தார்.
இலங்கை அனைத்து நாடுகளுக்கும் இந்த அணுகுமுறையில் சமமாக உள்ளது என்றும், அதன் விளைவாக சீனாவை மட்டும் இந்த செயல்முறையிலிருந்து விலக்க முடியாது என்றும் அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது.
ஐ.நா.பொதுச்சபை கூட்டத்தை முன்னிட்டு அமெரிக்கா சென்ற அமைச்சர் அலி சப்ரி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.