கலவானை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் இவ்விடம் அவதானிக்கப்பட்டு, குறித்த மாணவனை பிடித்து கலவானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கசிப்பு விற்றுள்ளார். இதையடுத்து குறித்த மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் இந்த கசிப்பை தண்ணீர் போத்தலில் கொண்டுவந்து பாடசாலையில் வைத்து கோப்பையில் ஊற்றி உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.