
சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இன்று (26) முதல் எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் பல்கலைகழகங்களை திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பலகலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (26) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சில பல்கலைகழக கட்டிடங்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நாட்டின் நிலையை கருத்திற் கொண்டு குறித்த கட்டிடங்களை விடுவித்ததன் பின்னர் பல்கலைகழங்களை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.