ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்ட இளைஞனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எப்பாவல, மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த அச்சுறுத்தல் பதிவை மேற்கொண்ட இளைஞரை துரிதமாக கண்டறிந்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.