சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் குழு உறுப்பினரும், சீனாவில் சோங்கிங் நகர சபையின் செயலாளருமான யுவான் ஜியாஜூன்(Yuan Jiajun) இன்று இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர், ஜூலை 19 முதல் 23 வரை இலங்கையில் இருப்பார் என்பதை இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
எனினும் இவரது இந்த திடீர் விஜயத்திற்கான காரணத்தை தூதரகம் விபரிக்கவில்லை.
யுவான் ஜியாஜுன், லியோனிங் மாகாணத்தில் உள்ள டோங்குவா கவுண்டியைச் சேர்ந்தவர். அவர் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர், ஒரு ஆராய்ச்சியாளர், முனைவர் பட்டம் வழங்குபவர் மற்றும் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களிப்புகளுடன் நடுத்தர வயது நிபுணர். சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
அவர் சீனா அகாடமி ஆஃப் ஸ்பேஸ் டெக்னாலஜியின் தலைவராகவும், சைனா அசோசியேஷன் ஃபார் சயின்ஸின் துணைத் தலைவராகவும், சர்வதேச விண்வெளி அகாடமியின் தொடர்புடைய உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.