Home LOCAL ஜே. எம் மீடியா கல்லூரியின் 12ஆவது குழு மாணவர்கள் செய்த முன்மாதிரி செயற்திட்டம்

ஜே. எம் மீடியா கல்லூரியின் 12ஆவது குழு மாணவர்கள் செய்த முன்மாதிரி செயற்திட்டம்

0
ஜே. எம் மீடியா கல்லூரியின் 12ஆவது குழு மாணவர்கள் செய்த முன்மாதிரி செயற்திட்டம்
ஜே. எம் மீடியா கல்லூரியில் 3 மாத கால மாஸ் மீடியா சான்றிதழ் ஊடக கற்கைநெறியை வெற்றிகரமாக பூரத்தி செய்த 12ஆவது குழு மாணவர்களால் முன்மாதிரி நிகழ்வொன்று மாத்தளையில் அமைந்துள்ள சென்.பிரான்சிஸ் சிறுவர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜே. எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி இவ்வருடம் பத்தாண்டு பூர்த்தி வருமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு பல சமூக சேவை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கமையவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாத்தளை புனித பிரான்சிஸ் சிறுவர் இல்லத்தின் மாணவர்களின் திறமைகளுக்கான களமாக அவர்களின் திறமைகளை மேடையேற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் மாணவர்களின் ஆளுமை விருத்தி, குழு நிர்வாக திறமை மற்றும் விவேக விடயங்களை அதிகரிக்கும் நோக்கிலும் பல செயற்பாடுகள் இங்கு நடாத்தப்பட்டன.
ஜே. எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் நாடறிந்த ஊடகவியலாளருமான ராஷிட் மல்ஹர்டீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாத்தளை சென்.பிரான்சிஸ் சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர் மதிப்புக்குரிய தோமஸ் மெத்யூஸ், ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளரும் மென் பொறியியலாளருமான ரஸா மல்ஹர்டீன், ஜே.எம் மீடியா நிறுவனத்தின் குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் மற்றும் ஜே. எம் மீடியா கல்லூரியின்
12ஆவது குழு மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
சிறுவர் இல்லத்திற்கான அன்றைய தினத்திற்கான மதிய போசன ஏற்பாடுகளையும் ஜே. எம் மீடியா கல்லூரியின் 12ஆவது குழு மாணவர்கள் மேற்கொண்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
மாத்தளை சென்.பிரான்சிஸ் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கு மறக்க முடியாத ஒரு மகிழ்ச்சிகரமான நாளாக இந்த நாள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜே. எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி ஜே. எம் மீடியா கல்லூரியின் 12ஆவது குழு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதுபோன்ற இன்னும் பல நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களிலும் இலங்கை மற்றும் சர்வதேச அரங்கில் நடைபெறவுள்ளமையை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here