ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற அலவத்துக்கொடை கமநல சேவைகள் நிலையத்தின் இரு அதிகாரிகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வயல் நிலமொன்றுக்கான சான்றிதழை வழங்குவதற்காக குறித்த இரு அதிகாரிகளும் இலஞ்சம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரி மற்றும் பிரதேச விவசாய அபிவிருத்தி அதிகாரி ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிலப் பதிவேட்டில் இருந்து வயல் நிலம் என்பதை நீக்கி நிலச் சான்றிதழ் வழங்குவதற்காகவே இவ்வாறு இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதற்கட்ட விசாரணைகளை தொடர்ந்து சந்தேகநபர்களை மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
