கம்பளை பகுதியில் நிலநடுக்கம்

0
1

கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இரவு 10.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 ரிக்டர் அளவிலான சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அந்த பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மஹாகனதரவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தங்கல ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

புபுரஸ்ஸ பிரதேசம் இதன் மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here