ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தமிழகத்தில் தஞ்சம்!

0
1

இலங்கை யாழ்பாணத்தில் இருந்து 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம் தொழில் வாய்ப்பு இல்லாததால் இங்கு வாழ வழியின்றி மக்கள் அபயம் தேடி அகதிகளாக இந்தியாவிற்கு செல்வது தொடர்ந்து வருகிறது.

பொருளாதார சீரழிவு தொடங்கியது முதல் இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்.

இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயன் (46), அவரது மனைவி ரஜினி (45), மகள் தபெந்தினி (18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 ஆண், 2 பெண்கள், உட்பட 3 பேர் அகதிகளாக இந்தியா செல்ல திட்டமிட்டு

நேற்று முன்தினம் (25.05.23) யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலைக்கு வந்து அங்கிருந்து இரவு 8 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவு 02.00 மணிக்கு தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை அப்பகுதிக்கு ரோந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும பொலிசார் 3 பேரையும் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here