பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பெண் உட்பட மூவர் கைது.

0
1

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவரை களனி பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த இடத்திற்கு வேறு ஒரு பெண்ணுடன் வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இன்று (25) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபரான பெண்ணும், இருவரும் பட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் 51, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here