பொதுப் பயணிகளுக்கு மேலதிக வசதியுடன் கூடிய போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக போக்குவரத்து துறை, டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபையின் பயணச்சீட்டு மற்றும் ரயில் பயணச்சீட்டு என்பன QR முறைமையாக மாற்றப்படவுள்ளதாகவும் அதனூடாக வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறிள்ளார்.
அத்துடன் முடியுமான அளவு விரைவாக டிஜிட்டல் சாரதி அனுமதி பத்திரத்தை அச்சிட்டு, தவறிழைக்கும் சாரதிகளுக்கு மதிப்பெண் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்…
