இலங்கையின் பொருளாதாரம் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு

0
1

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பினை சர்வதேச நாணய நிதியம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2023ல் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 3% வீழ்ச்சியடையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் சுமார் 1.5 வீதத்தால் வளர்ச்சியடைய முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here