சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது.
இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
துணை ராணுவப் படை தனது ஆதரவுப் படைகளுடன் முன்னேறி சென்று அந்நாட்டு சர்வதேச விமான நிலையத்தையும் ராணுவ தளம் ஒன்றையும் கைப்பற்றி உள்ளது.
சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையத்தை ஆர்.எஸ்.எப் துணை ராணுவமும் அதன் ஆதரவு படைகளும் சுற்றி வளைத்தன. அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஆர்.எஸ்.எப் துணை ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், “எங்களால் விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. அதேபோல் சூடானின் வடக்கு பகுதியில் அமைந்து இருக்கும் மெரோவே எனப்படும் ராணுவ தளத்தையும் நாங்கள் கைப்பற்றி உள்ளோம்.” என்று குறிப்பிட்டு உள்ளது.
எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை