Home LOCAL நாலக கொடஹேவா உள்ளிட்டோர் விடுதலை!

நாலக கொடஹேவா உள்ளிட்டோர் விடுதலை!

0
நாலக கொடஹேவா உள்ளிட்டோர் விடுதலை!

இலங்கை பரிவர்த்தனை மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய போது, ​​ஆணைக்குழுவின் நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை “தாருண்யட ஹெடக்” அமைப்பிற்கு வழங்கி அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் மூவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நீண்ட விசாரணைக்கு பிறகு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார்.

அதன்படி, பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட ஏனைய பிரதிவாதிகளில் முன்னாள் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் “தாருண்யட ஹெடக்” அமைப்பின் ரொனி இப்ராஹிம் ஆகியோர் அடங்குகின்றனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here