Home LOCAL மாதாந்த சம்பளத்தை வாரந்தோறும் வழங்க யோசனை!

மாதாந்த சம்பளத்தை வாரந்தோறும் வழங்க யோசனை!

0
மாதாந்த சம்பளத்தை வாரந்தோறும் வழங்க யோசனை!

மாதாந்த சம்பளத் தொகையை வாரந்தோறும் வழங்குவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை சேகரிக்கும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை.

மேலும் சம்பளம் வழங்குனரும் மற்றும் சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“வாரச் சம்பளம் வாங்கும் போது அந்தந்த வாரச் செலவுகளுக்கு பணம் கிடைப்பதால் மாத இறுதியில் கடன் வாங்க தேவைப்படாது . மேலும், பாரிய தொகையைக் ஒரேயடியாக ஈட்டுவது தொடர்பில் அரசாங்கத்திற்கோ, தனியாருக்கோ அழுத்தம் ஏற்படாது. மேலும், உலகின் பல நாடுகளில், தப்போது சம்பளம் வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றதே அன்றி மாதாந்திரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here