பூமியை நோக்கி 25,000 KM வேகத்தில் வரும் விண்கற்கள்!

பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு 25,000 கிமீ வேகத்தில் விண்கற்கள் வந்துக்கொண்டிருப்பதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து நாசா தெரிவிக்கையில்,
பூமியைச் சுற்றி எண்ணற்ற விண்வெளி கற்கள் சுற்றி வருகின்றன. இந்த விண்கல்லின் பெயர் 2022 லுபு5. இது 72 அடி நீளம் கொண்டது.
தற்போது இந்த விண்கல் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. பூமியை நோக்கி இது வந்தாலும் ஆபத்தான தூரத்தை அடைவதற்கு முன்பே விண்கல் அழிக்கப்படும்.
பூமியில் இருந்து ஆபத்தான விண்கற்களை திசை திருப்பும் தொழில்நுட்பத்தை உருவாக்க நாசா முயற்சித்து வருகின்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிறுகோளை திசை திருப்பும் கருவியும், வெற்றிகரமாக பரிசோதித்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here