இந்தியாவிலிருந்து முதலாவது தொகை நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரம் கொண்டுவரப்பட்டது

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் விவசாய உர உற்பத்தி கூட்டுறவு நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட நெனோ நைட்ரஜன் (Nano Nitrogen) யூரியா திரவ உரத்தின் முதல் தொகை இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு இலட்சம் லீட்டர் திரவ உரம் நாட்டை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள குறித்த உர தொகை அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பெரும்போக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வாரத்தினுள் மாத்திரம் 5 இலட்சம் லீட்டர் நெனோ நைட்ரஜன் யூரியா திரவ உரத்தை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றாடலுக்கு இணைவான விவசாயம் எனும் ஜனாதிபதியின் கருத்திட்டத்திற்கு ஏதுவாக பெரும்போக செய்கையில் சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here