அமெரிக்காவில் இருந்தபோது வெளியிட்ட ட்விட்டா் பதிவுக்காக, அந்த நாட்டைச் சோ்ந்தவா் முதியவருக்கு ஈரானில் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வசித்து வந்த 72 வயது சாத் இப்ராஹிம் அல்மாடி (படம்) ஓய்வு பெற்ற திட்ட அதிகாரியாவாா். அவா் சவூதி அரேபியாவைப் பூா்வமாகக் கொண்டவா். அவருக்கு அமெரிக்கா, சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை உள்ளது.
இந்த நிலையில், தனது உறவினா்களைச் சந்திப்பதற்காக சவூதி சென்ற இப்ராஹிம் அல்மாடியை அந்த நாட்டு போலீஸாா் கடந்த நவம்பா் மாதம் கைது செய்தனா்.
அமெரிக்காவில் இருந்தபோது சவூதி அரசுக்கு எதிராக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவுகள் தொடா்பாக கைது செய்யப்பட்ட அவா், சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாகவும் அவருக்கு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இந்த மாதம் தீா்ப்பளித்தாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தகவல் வெளியிட்டிருந்தது.
இதனை அல்மாடியின் மகன் இப்ராஹிமும், அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளும் தற்போது உறுதி செய்துள்ளனா்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், அல்மாடியின் கைது மற்றும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை குறித்து சவூதி அரேபியாவிடம் பேசி வருவதாகக் கூறினாா்