Bright Storm Forum ஏற்பாடு செய்த சமையல் நிகழ்ச்சி

கடந்த சில காலமாக பல சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் பிரயிட் ஸ்றோம் போரம் இன்று இன்னுமொரு சேவையை முன்னெடுத்தது.

சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள மற்றும் வீட்டில் புதிதாக உணவுப்பண்டங்களை தயாரிக்க ஆர்வமுள்ளவர்களுக்கான சமையல் நிகழ்ச்சியொன்றையே ஏற்பாடு செய்திருந்தது.

மாவனல்லை பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை உலக புகழ்பெற்ற எடின்பறோ நிறுவனம் நடாத்தியது.

இந்த நிகழ்ச்சியில் மாவனல்லை பிரதேச உதவி் செயலாளர் மற்றும் Bright Storm Forum இன் தலைவர் சல்மான் பாரிஸ்ம, முஹம்மத் அஸ்லம் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டதோடு நூற்றுக்கணக்கான பயனாளர்களும் பங்குபற்றினர்.

குறித்த செயலமர்வு சிங்கள மொழியில் நடைபெற்றதோடு தமிழ் மொழியிலான நிகழ்ச்சி நாளைய தினம் ஹெம்மாதகமையிலும் நாளை மறுநாள் மாவனல்லையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here