பயணிகளுடன் குடைசாய்ந்த பேருந்து

0
4

அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டுஓயா பகுதியில் நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணித்துள்ளதுடன், காயமடைந்த 06 பயணிகள் ஹிகுராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here