தாமரை கோபுரத்தை பார்க்க வருபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

0
4

தாமரை கோபுரத்தினை வார நாட்களில் மக்கள் பாவனைக்காக காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வார இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இனிமேல் 2000 ரூபா டிக்கெட் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார்.

அதைப் பார்க்க வழங்கப்படும் டிக்கெட்டின் விலை 500 ரூபாய் மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here