அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வனிந்து ஹசரங்க துடுப்பாட்ட வீரர்களுக்கு தலைவலியாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முத்தையா முரளிதரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்களில், இந்தியாவில் இடம்பெறும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் முத்தையா முரளிதரன் இணைந்து கொண்டதுடன், போட்டிக்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
எனினும் அவரது பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமலும் இல்லை என முத்தையா முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும் எனவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.