இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடன் இணைந்துக் கொள்ளவுள்ளதாக என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா இதனை தெரிவித்தார்.
அதன்படி, இலங்கை அணி ஒக்டோபர் 2ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ள நிலையில், ஒக்டோபர் 6ஆம் திகதி இலங்கை அணியுடன் மஹேல அவுஸ்திரேலியாவில் இணைந்து கொள்ளவுள்ளார்.
அன்றிலிருந்து போட்டித்தொடர் முடியும் வரை மஹேல ஜயவர்தன இலங்கை அணியுடன் இருப்பார் என ஏஷ்லி டி சில்வா மேலும் தெரிவித்தார்