ஐ.நா மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

0
1

ஐ.நா மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லட் உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையினை முன்வைக்கவுள்ளார்.

கூட்டத்தொடரின் இன்றைய முதல் நாளில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

2020ம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட 46/1 பிரேரணை செயற்படுத்தப்படும் விதம், மனித உரிமைகள் விடயங்கள் என்பன குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டவுள்ளார்.

அத்துடன் இலங்கை தொடர்பான விவாதமும் இன்றைய தினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here