ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்தது 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு 171 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை தழுவியது.