ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

0
1

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு முன்வைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

ரஞ்;ஜன் ராமநாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்குவதற்காக, சட்ட மாஅதிபரிடம் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சட்ட மாஅதிபர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம், தமது அமைச்சு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ரஞ்ஜன் ராமநாயக்க நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு, சத்திய கடதாசியொன்றை நீதிமன்றத்திற்கு வழங்கியதன் பின்னர், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், எதிர்வரும் சில தினங்களில் ரஞ்ஜன் ராமநாயக்க, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here