நாடு முழுவதும் லங்கா IOCக்கு எரிபொருள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படுகிறதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் போராட்டம், வாக்குவாதங்கள் மற்றும் நீண்ட வரிசையில் நிற்பது ஒரு பொதுவான காட்சியாகிவிட்டது.
லங்கா IOCக்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்காக நாளாந்தம் சுமார் 100 டேங்கர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.