யாழ்ப்பாணத்திற்கு நேற்று (24) மாலை விசேட விமானம் ஊடாக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) பலரை சந்தித்து வருகின்றார்.
நேற்றுமாலை அமெரிக்க தூதர் ஜூலி சுங்கை, (Julie Chung) முதல் சந்திப்பாக யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா சந்தித்து யாழ்.மாவட்ட நிலைமை குறித்து கலந்துரையாடியிருந்தார்.
பின்னர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமி, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க தூதர் (Julie Chung0,
எந்தவொரு ஜனநாயகத்திலும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளுக்காக வாதிடுவதில் சிவில் சமூகம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் குறித்து விவாதிப்பதற்கும் ஜனநாயக இலங்கைக்கான எமது ஆதரவை மீண்டும் வலியுறுத்துவதற்கும் நான் யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகத் தலைவர்களைச் சந்தித்ததார்.
இன்று (25) காலை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபட்டதுடன் இன்று நான் யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்றிருந்தேன் – இது இலங்கையை மிகவும் சிறப்பானதாக மாற்றும் மதப் பன்முகத்தன்மையின் முக்கியமான நினைவூட்டலாகும். மத சுதந்திரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான இலங்கைக்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பின்னர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடினார்- இதுகுறித்து தூதுவர் தனது ருவிட்டரில் இலங்கை முழுவதும் நிலையான முதலீட்டை ஈர்ப்பது மற்றும் பொருளாதார வாய்ப்பை ஊக்குவிப்பது அமெரிக்காவின் முன்னுரிமையாகும். ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களும் நானும் இன்றைய பொருளாதார சவால்கள் மற்றும் வடமாகாணத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிப்பது என்பது குறித்து கலந்துரையாடினோம். என தெரிவித்துள்ளார். JAFFNA — S.RAVEENAN ( JMMC 10 )