பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தமது கட்சி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக அந்த டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.