Home LOCAL அரசாங்கத்தில் மஹிந்த அவுட்டா? − மனம் திறந்தார் மஹிந்த

அரசாங்கத்தில் மஹிந்த அவுட்டா? − மனம் திறந்தார் மஹிந்த

0
அரசாங்கத்தில் மஹிந்த அவுட்டா? − மனம் திறந்தார் மஹிந்த

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சு நடக்கின்றதா? என்பது குறித்து தனக்கு தெரியாது என கூறிய அவர், அவ்வாறு ஒன்று நடந்தால், தான் அவுட்டா? என கேள்வி எழுப்பியதுடன் மஹிந்த ராஜபக்ஸ சிரித்துள்ளார்.

அரசாங்கம் தற்போது ரணில் விக்ரமசிங்கவிடமா ஆலோசனை கேட்கின்றது என பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வங்கியை கொள்ளையிட வேண்டுமாயின், ரணிலிடம் ஆலோசனை கேட்கலாம் என கூறிய மஹிந்த ராஜபக்ஸ, அரசியலில் ஆலோசனை கேட்குமளவிற்கு அரசாங்கம் இன்னும் தாழ்ந்துவிடவில்லை எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here