பிரதான புகையிரத பாதையில் பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமே தடம் புரண்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக தண்டவாளம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அந்த இடத்தில் உள்ள இரட்டைப் பாதையில் ஒன்று பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது