கடந்த வியாழன் அன்று உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
இறந்தவர்களில் 13 குழந்தைகளும் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
ஆனால், உண்மையான இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசல் தெரிவித்துள்ளார்.
கனரக பீரங்கி ஷெல் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பிற பரந்த தாக்கம் கொண்ட வெடிபொருட்கள் ஆகியவற்றின் விளைவாக பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக த்ரோசல் கூறினார்.