Home LOCAL எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு l பொலிஸ் மாஅதிபர் அதிரடி உத்தரவு

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு l பொலிஸ் மாஅதிபர் அதிரடி உத்தரவு

0

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில், மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியை பேணுவதற்காக, உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மாஅதிபர், அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here