கொழும்பு – ஜம்பட்டா வீதியிலுள்ள கட்டமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.
களஞ்சியசாலையில் பரவிய தீ, பின்னர் அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவு கூறுகின்றது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை
இந்த தீ பரவலினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.