இந்தியாவிடமிருந்து திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளது

இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் (Nano Nitrogen) திரவ உரத்தை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்தியாவின் குஜராத் மாநில நிறுவனம் ஒன்றிடமிருந்து திரவ பசளை கொள்வனவு செய்யப்படவுள்ளது.

சர்வதேச ரீதியில் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சிறந்த பயனை வழங்கக்கூடிய வகையில் நனோ நைட்ரஜன் பசளை காணப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது பயன்படுத்தப்படும் யூரியா பசளையை விட சிறந்த பயனை திரவ சேதன பசளை வழங்கும் என விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here