இலங்கைக்கு படையெடுத்து வந்த 4000 உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்த சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கான விஸாவை பெற்றே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது.

எனினும், உக்ரைனில் தற்போது ஏற்பட்டு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விஸா கால எல்லையை அதிகரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விஸா காலம் முடிவடைந்த பின்னர், நாடு திரும்ப விரும்பும் உக்ரைன் பிரஜைகளை, நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இலங்கையிலிருந்து உக்ரைன்கு நேரடி விமான சேவை இல்லாமையினால், வேறு நாடுகளின் ஊடாக பயணிக்கும் விமானங்களின் மூலம் சுற்றுலா பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here