பிரிட்டன் அரசிக்கு கொரோனா தொற்று உறுதி

பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிம்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அரசிக்கு லேசான சளி போன்ற அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ள அரண்மனை, வரும் வாரங்களில் அவர் “லேசான பணிகளை” மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளது.

“அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார் ” என்று அரண்மனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

95 வயதான அரசி தனது மூத்த மகனும் பட்டத்து வாரிசுமான வேல்ஸ் இளவரசருடன் தொடர்பில் இருந்தார். இளவரசருக்கு கடந்த வாரம் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரிட்டனில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த அரசியான இரண்டாம் எலிசபெத், கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி தனது 70 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தார்.

சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு தனது முதல் பெரிய பொது நிகழ்ச்சியாக, சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் தொண்டு ஊழியர்களைச் சந்தித்தார்.

அரசி வசிக்கும் விண்ட்சர் கோட்டையில் பலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அரசு தனது முதல் தவணை தடுப்பூசியை கடந்த ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி போட்டுக் கொண்டார்.

இளவரசர் சார்லஸின் மனைவி கமீலாவுக்கும் ஏற்கெனவெ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது இது இரண்டாவது முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here