ஆஸ்திரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சிய சீன கடற்படை கப்பல்

லேசர் ஒளியைப் பாய்ச்சிய இரு கப்பல்களின் படங்களையும் ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ளது.

சீன கடற்படைக் கப்பல் ஒன்று, ஆஸ்திரேலிய போர் கப்பல் ஒன்றின் மீது “ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான” லேசர் ஒளியை கொண்டு பாய்ச்சியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது.

வடக்கு ஆஸ்திரேலியாவின் அரஃபுரா கடலில் கடந்த வியாழனன்று ​​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் “உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன, சீனாவின் இத்தகைய செயல் “கண்டிக்கத்தக்கது” எனவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.சீனா இந்த விவகாரம் தொடர்பாக எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை.

ஆஸ்திரேலிய ஊடகங்கள் இதற்கு முன்னதாக சீனாவின் சிறிய கப்பல்களில் இருந்து லேசர் ஒளியைப் பாய்ச்சிய சம்பவம் நடைபெற்றிருப்பதாக கூறுகின்றன.சமீப ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மற்றும் சீனா இருநாட்டு இடையே பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here