நாடளாவிய ரீதியில் இன்று காலை பொலிஸாரினால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களாலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், முள்ளியவளை மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நடாங்கண்டல் , கொக்குளாய், மணலாறு ஆகிய பொலிஸ் நிலையங்களின் உத்தியோகத்தர்களால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.
அந்த வகையிலேயே முல்லைத்தீவு மாவட்டத்தின் உடைய முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினால் முல்லைத்தீவு கடற்கரையை சுத்தம் செய்கின்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதிகளவான மக்கள் வருகின்ற முல்லைத்தீவு கடற்கரை பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களால் நிறைந்து வழிந்த நிலையில் பொலிஸாரினால் இன்றைய தினம் குறித்த பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டன