Home LOCAL பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 11 மில்லியன் ரூபா நட்டம்

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 11 மில்லியன் ரூபா நட்டம்

0

தற்போதைய சூழலில் இம் மாதத்தில் சுமார் 11 பில்லியன் ரூபா நட்டமேற்படலாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் அல்லது எரிபொருளுக்கான வரிச்சலுகைகளை வழங்க வேண்டும் என நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் எரிபொருட்களின் விலை தொடர்ந்தும் இவ்வாறு பேணப்படுமாயின், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் நாட்டின் எரிபொருள் விநியோகம் நெருக்கடிக்கு உள்ளாகும் என எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற்கொண்டு எரிபொருள் மீதான வரியை குறைக்குமாறு அல்லது எரிபொருள் விலை அதிகரிப்பை துரிதப்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here