Home LOCAL அத்தியவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட குழு

அத்தியவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட குழு

0

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பற்றாக்குறை இன்றி பொதுமக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்ட குழு    கூடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கப்பெறாமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், சிறிய வியாபாரிகள் அரசின் மூலம் வழங்கப்படும் நிவாரணப் பொதிகளை அதிக விலைக்கு விற்பதாக தெரிய வந்துள்ளது.

அதே போன்று மாவட்ட ரீதியில் பொருட்கள் பாரிய விலை வித்தியாசத்தில் விற்கப்படுவதாகவும் அது குறித்த தகவல்கள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருட்களின் விலைகள் பகிரங்கமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இலங்கையில் இல்லாமையே இதற்கான காரணம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

எனவே அத்தியவசிய பொருட்களின் விலையை மாத்திரமாவது கட்டாயமாக காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here