இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
தென்கொரியாவின் சியோலில் நாளை இடம்பெறவுள்ள 2022 ற்கான உலக அமைதி மாநாட்டில் கலந்துகொள்ள இவ்வாறு தென்கொரியா விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 157 நாடுகள் கலந்து கொள்ளும் குறித்த மாநாட்டில் இலங்கை சார்;பாக முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.