அமேசான் நிறுவன உரிமையாளர் கட்டிய பிரம்மாண்டமான கப்பலுக்காக பழைமையான பாலம் ஒன்று இடிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னனி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவன உரிமையாளர் சுமார் 3700 கோடி மதிப்பில் 417 அடி நீளமுள்ள பிரமாண்டமான கப்பல் ஒன்றை கட்டியுள்ளார்.
இந்த கப்பல் நெதர்லாந்து நாட்டில் உள்ள நியூவிமாஸ் என்ற நதிக்கரையில் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குறித்த கப்பலை கடலுக்கு எடுத்து செல்லும் வழியிலுள்ள பழைமையான பாலம் இடிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாலம் 1878 ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன் தற்போது அது இடிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.