வறட்சியான காலநிலை நிலைமைகள் காரணமாக பொதுமக்கள் நீர்ப்பாவனையை மட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை வறட்சியான காலநிலை நிலைமைகள் காரணமாக வரும் காலங்களில் வழங்கப்படும் நீரின் அளவு மட்டுப்படுத்தப்படக் கூடும் என எச்சரித்துள்ளது.
அத்துடன் ஒப்பீட்டளவில் மக்கள் மத்தியிலான நீர்ப் பாவனை அதிகரித்து வருவதாகவும் குடிநீரை அநாவசிய தேவைககளுக்காக பயன்படுத்துகின்றமையைத் தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.