ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ போர் விமானம் மற்றும் ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாய்ட் ஆஸ்டினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்துயடுத்து யேமன் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உதவ போர்க்கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்ப அமெரிக்கா முடிவு எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான கூட்டாண்மைக்கு அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக தகவல்படி, யு.எஸ்.எஸ் கோல் என்ற ஏவுகணை அழிக்கும் கப்பலை அமெரிக்கா ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த மாதம், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர், அதில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.