சீன கடற்பரப்பில் விழுந்த அமெரிக்க விமானம்

0
1

தெற்கு சீனாவின் கடற்பரப்பினுள் விழுந்த ஜெட்டினை மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த ஜெட்டினை தரையிறக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடற்பரப்பினுள் விழுந்துள்ளதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

பயணித்த 7 இராணுவத்தினரில் விமானிக்கு மாத்திரமே காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல மில்லியன் பெறுமதியான குறித்த விமானமானது சீனாவின் கைப்பற்றலுக்குள்ளாகும் அச்சுறுத்தல் காரணமாக, விரைவாக குறித்த விமானத்தை மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் விரைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here