இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் பிராந்திய ஒன்றிணைப்பிற்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும் ஜனவரி 20 தொடக்கம் 27 ஆம் திகதி வரையில் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன், இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானின் விருந்தோம்பல் மற்றும் வரவேற்பு குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் வர்த்தகம், கல்வி, தொழிநுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.