கஸகஸ்தானில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகள் காரணமாக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அந்நாட்டின் உள்ளுர் ஆட்சியாளர்கள் பலர் போரட்டக்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான அல்மடி, கிளர்ச்சியாளர்கள் மத்தியில் இருப்பதாகவும் தாக்குதல்கள் காரணமாக கட்டிடங்கள் உட்பட பாரிய உடைமைச் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் நிலைமையைக் கடடுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமைக் காரணமாகவும் தொடரும் அழுத்த நிலைமைகள் அந்நாட்டு பிரதமர் அஸ்கர் மாமின் பதவி விலகியுள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாட்டின் நிலைமைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கஸகஸ்தான் ஜனாதிபதி இராணுவத்தினரின் உதவியை நாடுவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.