சீனாவின் புகாரை நிராகரித்த எலான் மஸ்க்

தன்னுடைய ஸ்டார்க் லைன் செயற்கைக்கோள் இணையத் திட்டம் (Starlink satellite internet project) விண்வெளியில் அதிகளவு இடம்பிடிப்பதாக வெளியிடப்பட்ட கருத்தை நிராகரித்துள்ளார் எலான் மஸ்க்.

தமது விண்வெளி நிலையம், ஸ்டார்க் லைன் செயற்கைக்கோளுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சீனா கூறிய புகாரிற்கு பதிலளிக்கும் வகையில் எலான் இவ்வாறு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பில்லியன் கணக்கிலான செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகாமையிலுள்ள ஒழுக்குகளில் நிறுத்த முடியும் எனவும் விண்வெளி மிகவும் விசாலமானது எனவும் செயற்கைக்கோள்கள் மிகவும் சிறியவை எனவும் தெரிவித்துள்ளார் எலான்.

யாருடைய செயற்பாடுகளிற்கும் குறுக்கிடுவது தமது நிறுவனத்தின் நோக்கமல்ல எனவும் அவ்வாறு யாருடைய நடவடிக்கைகளுக்கும் இடையில் குறுக்கிடவில்லை எனவும் எலான் தெரிவித்துள்ளமைக் குறுப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here